1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! 26 மாவட்டங்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை சுற்றறிக்கை..!

1

கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. கனமழை காரணமாக தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. மழை பெய்து கோடை வெயிலை தணித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மே 19ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்

 

இந்த நிலையில் 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், “மே 18ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மே 19ஆம் தேதி முதல் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்.

 

கரையோரங்களில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகளை செய்துத் தர வேண்டும். கனமழை காரணமாக ஏற்படும் சேதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like