1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! மீண்டும் பரவும் கொரோனா...இதற்கு பெயர் FLiRT..!

1

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் உலகமெங்கும் கொரோனா தாக்கம் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்தது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. ஊரடங்கு அமல்படுத்தியும் வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வந்த நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவுவது படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கோவிட்-ன் 2 புதிய வேரியன்ட்ஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. “FLiRT” என குறிப்பிடப்படும் இந்த இரண்டு வேரியன்ட்ஸ்களிலும் KP.2 அடங்கும்.

அமெரிக்க தொற்று நோய் சங்கத்தின் கூற்றுப்படி, ‘FLiRT’ என்ற புனைப்பெயர் அவற்றின் mutations-களுக்கான தொழில்நுட்ப பெயர்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) இது தீவிர வேரியன்ட் என மறுவகைப்படுத்தி, நெருக்கமாக கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் FLiRT வேரியன்ட்ஸ்கள் JN.1.11.1-ன் ஸ்பின்ஆஃப்ஸ் ஆகும். அவை ஓமைக்ரான் வேரியன்ட்டின் ஒரு பகுதியாகும்.

தொண்டை வலி, இருமல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசைவலி, காய்ச்சல் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு போன்ற மற்ற ஒமைக்ரான் சப்-வேரியன்ட்ஸ்களின் அறிகுறிகளைப் போலவே புதிய FLiRT வேரியன்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like