1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! ஹெல்மெட் போடாதவங்களுக்கு டிவி பார்த்து பைன் போடும் போலீஸ்..!

1

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், தாம்பரம், திருநெல்வேலி உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக சென்று வந்த பொதுமக்கள் இனி அப்படி பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று ஹெல்மெட் போட தவிர்ப்பவர்களுக்கு செக் வைத்த போலீசார்.

போக்குவரத்து போலீசார் கடந்த இரண்ட வருடங்களாக எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என பலருக்கும் போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இதில் ஹைலைட்டான விஷயம் சென்னைக்கு மட்டும் இருக்கிறது. அது ஆன்லைன் அபராதம் முறை தான்.

சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகன சோதனையின் போது தலைகவசம் அணியாமல் தப்பிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மக்களே கண்டிப்பா ஹெல்மெட் போடுங்க, உங்க உயிரையும் பணத்தையும் காப்பாத்திக்கோங்க என்று கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோவை டேக் செய்து கருத்து பதிவிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like