மக்களே உஷார்..! சென்னை வானிலை மையம் வார்னிங்..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வரும் ஜூலை 16ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமானது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இது மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
.png)