மக்களே உஷார்..! ஒருநாள் முன்பே உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
22 ஆம் தேதி அந்தமானை ஒட்டிய வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதேபோல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் ஆனால் அந்த காற்றழுத்தால் போது இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்லும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்க கடல் பகுதியில் 22 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக 21 ஆம் தேதியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், புயலாக மாறும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என்றும் தகவல் வெளியானது. இதனிடையே கேரளா மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளள இதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.