1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கள்ளக்குறிச்சியில் 7 பேருக்கு எலி காய்ச்சல்..!

1

கேரளாவில் ஏற்கனவே மூளையை உண்ணும் அமீபா அலற விட்டுக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் சிலருக்கு இப்போது எலிக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வசதொரசலூர் என்ற கிராமத்தில் சிலருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், வாந்தி, மயக்கம் என்று பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகளைப் பார்த்த உடன் அது வழக்கமான காய்ச்சல் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் அஞ்சியது போலவே ரத்தப் பரிசோதனை ரிப்போர்ட்டில் அவர்களுக்கு எளி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கே அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே இடத்தில் ஏழு பேருக்கு எலிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அறிகுறிகள்: இந்த எலிக் காய்ச்சல் ஏற்படும் போது உடல் வெப்ப நிலை 40 டிகிரியை தாண்டி காய்ச்சல் ஏற்படும். மேலும், தீவிர தலைவலி, ரத்த அழுத்தம் குறைதல், கண் சிவத்தல், குமட்டல் ஆகியவை கூட ஏற்படும். மேலும், ஒரு நாளில் பல முறை வாந்தி, கண் பகுதியில் இருந்து ரத்தக் கசிவும் ஏற்படும். சில நேரம் நிலைமை மோசமானால் மஞ்சள் காமாலை கூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது.

Trending News

Latest News

You May Like