1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! இனி அனுமதியின்றி மற்றவர்களின் போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை..!

1

நாம் அனைவருமே சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டோம். இத்தகைய சூழலில் தான் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படும் போட்டோக்களை குறிவைத்து சிலர் மோசடிகளை தொடங்குகின்றனர். வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் போட்டோக்களை பயன்படுத்தி ஆபாசமாக சித்தரித்து பெண்களை மிரட்டும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதுதொடர்பாக பல புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. இதனால் பெண்கள் வலைதளங்களில் போட்டோக்களை பதிவிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இந்நிலையில் தான் தற்போது சென்னை பெருநகர காவல்துறை சார்பில் முக்கியமான வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதியின்றி ஒருவரின் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோருக்கான எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைனில் தனியுரிமையினை மதிக்கவும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66 E படி, தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிடக்கூடாது. மீறி வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பதிவில் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணும்(1930) காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கூறிய பிரச்சனைகளை யாரேனும் சந்திக்கும்பட்சத்தில் 1930 எனும் தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 


 

Trending News

Latest News

You May Like