மக்களே உஷார்..! இன்று இரவு 9 மணி முதல் 21 மின்சார ரெயில்கள் ரத்து!
தாம்பரம்-கடற்கரை இரவு 10.40 மணி மின்சார ரெயில், இரவு 11.20 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில், இரவு 11.40 மணி தாம்பரம்-கடற்கரை ரெயில். திருவள்ளூரிலிருந்து கடற்கரைக்கு இரவு 9.35 மணிக்குப் புறப்படும் மின்சார ரெயில். கடற்கரையிலிருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்குப் புறப்படும் ரெயில்.
இரவு 9.20 மணி கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில், இரவு 9.55 மணி கும்மிடிப்பூண்டி-கடற்கரை மின்சார ரெயில், கடற்கரையிலிருந்து அரக்கோணத்திற்கு நாளை அதிகாலை 4.05 மணிக்குப் புறப்படும் மின்சார ரெயில்,
கடற்கரையிலிருந்து தாம்பரத்திற்கு நாளை அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் ரெயில் ஆகிய ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 8.45 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்- கடற்கரை நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 9.10 மணிக்குச் செங்கல்பட்டு – கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை நிலையம் இடையே ரத்து. திருவள்ளூர்-கடற்கரை இடையே இரவு 8 மணிக்குப் புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 10.10 மணிக்குப் புறப்படும் மின்சார ரெயில் எழும்பூர்-கடற்கரை இடையே ரத்து.
செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரவு 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை – செங்கல்பட்டு இடையே இரவு 10.40 மணிக்குப் புறப்படும் மின்சார ரெயில்.
கடற்கரை-தாம்பரம் இடையே 11.05 மணி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை அதிகாலை 3.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை- எழும்பூர் நிலையம் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சென்னை கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.