மக்களே உஷார்..!! கடலூர் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல்...கியூவில் நிற்கும் மக்கள்!!

கோடை காலம் முடிந்து கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் அதிக வெயிலும் மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் இந்த காய்ச்சல் பரவி வரும் நிலையில், காய்ச்சலுடன் சளி மற்றும் இரும்பல் இருப்பதால் கடந்த சில நாட்களாகவே தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை முதல் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதிகளவில் மக்கள் புறநோயாளிகளாக வந்து குவிந்துள்ளனர். இன்று காலை முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து டோக்கனை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று மருத்துவர்களை பார்த்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த காய்ச்சல் மருத்துவர்கள் ஆலோசனை படி மருந்துகள் எடுத்துக்கொண்டால் இந்த காய்ச்சல் 3 நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகபடியான நோயாளிகள் ஒரே நாளில் வருவதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கு இதனை போக்க வேண்டும் என்றும், தற்போது வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.