1. Home
  2. தமிழ்நாடு

மக்களே தயாரா இருங்க.. ஜனவரி வரை தொடரும் அபாயம்: தமிழகத்துக்கு மீண்டும் எச்சரிக்கை !

மக்களே தயாரா இருங்க.. ஜனவரி வரை தொடரும் அபாயம்: தமிழகத்துக்கு மீண்டும் எச்சரிக்கை !


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நவம்பர் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியகியது. தற்போது கடந்த நாட்களாக மழை சற்று ஓய்ந்து வெயில் தலைகாட்டி வருகிறது. இதனால் மக்கள் விறுவிறுப்பாக அடுத்த மழை வந்துவிடுமோ என துணிகளை துவைத்து காயவைத்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மழை குறைந்து நீண்ட நாள்களுக்குப் பின்னர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்கப்பாதைகளில் நீர் வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மக்களே தயாரா இருங்க.. ஜனவரி வரை தொடரும் அபாயம்: தமிழகத்துக்கு மீண்டும் எச்சரிக்கை !

ஆனால், வானிலை ஆய்வு மையம் தற்போது மீண்டும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வாரம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி அதே இடத்தில் நிலவுகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மேலும், டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் மழை இருக்காது. 7, 8ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதியில் அடுத்த காற்றழுத்தம் உருவாகி 9ஆம் தேதி மேற்கு நோக்கி நகர்ந்து 10, 11, 12ஆம் தேதிகளில் இலங்கை மற்றும் தமிழகத்துக்கு நெருங்கி வரும். அதன் காரணமாவும் தமிழகத்தில் மழை பெய்யும்.

மக்களே தயாரா இருங்க.. ஜனவரி வரை தொடரும் அபாயம்: தமிழகத்துக்கு மீண்டும் எச்சரிக்கை !

அதற்கு பிறகு டிசம்பர் 15ம் தேதி வரை மழை பெய்யாமல் நின்று, 16ம் தேதி முதல் டிசம்பர் 22ம் தேதி வரை அடுத்த காற்றழுத்தம் ஏற்பட்டு மழை பெய்யும். டிசம்பர் 26ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஒரு காற்றழுத்தம் உருவாகி டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை மழை பெய்யும். அதாவது டிசம்பர் மாதம் 4 காற்றழுத்தங்களும், ஜனவரி மாதத்தில் 3 காற்றழுத்தங்களும் உருவாகும் என்றும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரை மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மறுபடியும் முதலில் இருந்தா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏனெனில் தமிழகத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு என்பது அனைவரும் அறிந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like