மக்கள் அதிர்ச்சி..! கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை..!
குரங்கம்மை என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு வகை நோய்த்தொற்றாகும். ஆப்ரிக்க ஆய்வகம் ஒன்றில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு இருந்த குரங்கில் இருந்து இதன் வைரஸ் கிருமி எடுக்கப்பட்டதால் இந்த தொற்றுக்கு குரங்கம்மை என்று பெயர் ஏற்பட்டது. காய்ச்சல், கடும் தலைவலி, சருமத்தில் ஏற்படும் கொப்புளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நிலையில் அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய 26 வயது இளைஞருக்கு குரங்கம்மைத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயநாட்டைச் சேர்ந்த அவர் குரங்கம்மை தொற்றுகளுடன் காணப்பட்டதால் பரியவரம் மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகின்றனர். இதனிடையே தலசேரியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருக்கும் குரங்கம்மைத் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவர் துபாயில் இருந்து கேரளா திரும்பியாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கம்மை அறிகுறிகளுடன் அவர் காணப்பட்டதால் அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் வெளியான பின்னர் அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என்பது தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.