1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! சென்ற மாதம் ரூ.158 குறைக்கப்பட்ட சிலிண்டரின் விலை 203 ரூபாய் அதிகரிப்பு..!!

1

 சென்னையில் 19 கிலோ எடைக் கொண்ட வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 203 உயர்ந்து ரூபாய் 1,898- க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வணிகப் பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், மீண்டும் உயர்ந்திருப்பது உணவகங்கள், பேக்கரி, கேட்டரிங் ஆகிய தொழில் செய்வோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனினும், சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலைத் தொடர்ந்து ரூபாய் 918.50- க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.158 குறைக்கப்பட்டது. அதன் படி சென்னையில் 1695 ரூபாய்க்கு விற்பனையானது.  இந்தநிலையில் தற்போது வணிக பயனபாட்டிற்கான சிலிண்டர் விலை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 203 ரூபாய் அதிகரித்து 1898 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like