மக்கள் அதிர்ச்சி..! ஏசி பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதித்த மாநில அரசு..!
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. அது போல் தென் இந்தியாவின் தமிழகம், கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெப்பம் அதிகரித்து வருகிறது.
வெப்பம் அதிகம் உள்ள மாநிலங்களில் எல்லாம் மின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கிறது. அந்த வகையில் கேரளாவில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மின்சார வாரியம் திணறுகிறது. மே 2ஆம் தேதி மட்டும் மாநிலத்தின் மொத்த மின் நுகர்வு 114.18 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.2026ல் என்ன தேவை இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததோ, அது இப்போது தேவையாக உள்ளது.
எனவே அதிக மின் நுகர்வை தவிர்க்க சில வழிகாட்டுதல்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது :
தொழிற்சாலைகள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை வேலைகளை தவிர்க்க வேண்டும்.
குடிநீர் பம்பிங் பணிகளின் நேரத்தை குடிநீர் வினியோகம் பாதிக்காத வகையில் மறு சீரமைக்க வேண்டும்.
பெரிய கடைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் பெயர் பலகைகளில் உள்ள விளக்குகள், அலங்கார விளக்குகளை தவிர்க்க வேண்டும்.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 'ஏசி' பயன்படுத்தும் போது, 26 டிகிரி செல்ஷியஸ் இருப்பது போன்று 'செட்' செய்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இரவு 10:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை முடிந்த அளவு மின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.