1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் விலை சரிவு..!

1

"2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க கோடக் மஹிந்திரா வங்கி தவறியுள்ளதாகவும் அதன் தகவல் பாதுகாப்பு நிர்வாகத்தில் குறைபாடு இருப்பதாக மதிப்பிடப்பட்டது" என்று ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே கோடக் மஹிந்திரா வங்கி ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த தடையால் தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோடக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் இன்று பங்குச்சந்தையில் அதிகபட்சமாக 10% வரை சரிந்து ரூ.1,659 க்கு சரிந்து அதன் முதலீட்டாளர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதன் காரணமாக, பல பங்குதரகர் நிறுவனங்கள் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகளின் டார்கெட் விலையை குறைத்துள்ளன.

உதாரணமாக, 'hold' என்ற மதிப்பீட்டைக் அளித்துள்ளது Jefferies நிறுவனம், கோடக் மஹிந்திரா பங்குகளின் இலக்கு விலையை ரூ.2,050 இல் இருந்து ரூ.1,970 ஆக குறைத்துள்ளது. இதேபோல், Emkay Global நிறுவனமும் இலக்கு விலையை ரூ.1,950 இல் இருந்து ரூ.1,750 ஆகக் குறைத்துள்ளது. இதனிடையே, டார்கெட் விலையைக் குறைக்காத Macquarie நிறுவனம் கூட, "ஆர்பிஐயின் இந்த நடவடிக்கை கோடக் மஹிந்திரா வங்கிக்கு பெரும் பின்னடைவு" என்று ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் வங்கித்துறை முதலீட்டாளர்களும், கோடக் மஹிந்திரா முதலீட்டாளர்களும் உஷாராக செயல்படுவது அவசியம்.
 

Trending News

Latest News

You May Like