மக்கள் அதிர்ச்சி..! வரும் 29 தேதி வரை கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை..!
உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த சில மாதங்களாக பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. அமெரிக்காவில் பசுக்கள் உள்ளிட்ட கால்நடைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது.
கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது கேரளாவின் கோட்டயம் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது.ஏப்ரல் மாதத்தில் ஆலப்புழாவில் இந்த நோய் கண்டறியப்பட்டது.
மேலும் இந்த பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு கோழி பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்துள்ளன . இதனால் தற்போது கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோட்டயம் பகுதிகளில் வரும் 29ம் தேதி வரை கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டயம் மற்றும் அதனை சுற்றி 10 கி.மீ. தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பறவைக் காய்ச்சல் குறித்து சர்வதேச சுகாதார நிபுணர்கள் கூறியதாவது: உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 888 மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட் டிருக்கிறது. இதில் 463 பேர் உயிரிழந்து உள்ளனர்.
எச்5என்1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கோழி, வாத்து பண்ணைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கே பெரும்பாலும் பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் எச்5என்1 வைரஸால் பாதிக்கப்பட்ட பறவைகளின் இறைச்சி, முட்டைகளை முறையாக வேக வைக்காமல் சாப்பிடுவோருக்கும் பறவைக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.