1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! இன்று முதல் மூடப்படும் ரயில் நிலையம்..!

1

தமிழகத்தில் உள்ள கரூர்-சேலம் வழித்தடத்தில் வாங்கல் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இன்று முதல் இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் மோனூர்-கரூர் வழித்தடத்தில் வாங்கல் ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல்-கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. அப்போது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாங்கல் ரயில் நிலையம் கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து, பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்று செல்லும்.ரயில் நின்று செல்லும் நிலையில் அப்பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேசன் பயன்பாடு பெரிய அளவில் இல்லை. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து, ரயிலில் ஏறி சென்று வந்தனர்.

இதன் அடிப்படையில் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை இன்று அதாவது 25ம் தேதி முதல் மூடுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் இனிமேல் வாங்கல் ரயில்வே ஸ்டேஷனில் சேலம்-கரூர் ரயில் நின்று செல்லாது.

வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும், ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படாது எனவும், பிற ரயில் நிலையங்களில் இருந்து வாங்கல் ரயில் நிலையத்துக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது எனவும் சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like