மக்கள் அதிர்ச்சி..!சாலையோரத்தில் தொழுகை நடத்திய பக்தர்களை எட்டி உதைத்த போலீஸ்..!

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் பக்தர்களை காலால் எட்டி உதைத்தும் தலையில் ஓங்கி அடித்தும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அராஜகத்தை ஈடுபட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி இந்திரலோக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் பக்தர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இடம் கிடைக்காமல் பலர் வெளியே சாலையோரத்தில் அமர்ந்து தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்க வந்த போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒருவரின் பின்பகுதியில் காலால் ஓங்கி மிதித்தார். மற்றொருவரை தலையிலும் முகத்திலும் தாக்கினார். ஆனால் தாக்கப்பட்டவர்கள் அமைதி காத்தனர்.
இதைப் பார்த்தஅருகில் இருந்தவர்கள் திரண்டு அந்த சப் இன்ஸ்பெக்டர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர் அவரை தாக்கவும் முயன்றனர். போலீசாரும் பொதுமக்களும் அவர்களை சமாதானம் செய்து சப் இன்ஸ்பெக்டரை அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.
இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டார். அவருடைய பெயர் மனோஜ் தோமர் என தெரியவந்துள்ளது. அவர் மீது துறையில் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டெல்லி வடக்கு பகுதி துணை கமிஷனர் மனோஜ் குமார் மீனா தெரிவித்தார்.