1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2000க்கு விற்பனை!

1

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பனிப்பொழிவும் நிலவியது. இதன் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று அனுமன் ஜெயந்தி மற்றும் அமாவாசை தினம் என்பதால் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை, கனகாம்பரம், முல்லைப் பூ உள்ளிட்ட பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2000க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும், முல்லைப்பூ ரூ.1,000க்கும், ஜாதிப்பூ ரூ.650க்கும், ரோஜா ரூ.160-க்கும், செண்டுமல்லி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.50-க்கும், சம்பங்கி ரூ.130 க்கும், கோழிக்கொண்டை ரூ.80-க்கும், அரளி பூ ரூ.150-க்கும், மரிக்கொழுந்து ரூ.90-க்கும், காக்கரட்டான் ரூ.900-க்கும், விரிச்சிப் பூ ரூ.130-க்கும், பட்டன் ரோஸ் 200 முதல் 230 வரையிலும், தாமரைப்பூ 20 ரூபாய்க்கும் விற்பனையானது

Trending News

Latest News

You May Like