1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! கர்நாடகாவில் சினிமா டிக்கெட் உயர்கிறது... கூடவே ஓடிடி கட்டணமும் உயர்கிறது..!

1

கர்நாடகா திரைப்பட மற்றும் கலாச்சார செயல்பாடுகள் (நலத்துறை) மசோதா 2024 தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா கர்நாடகா திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் மட்டுமின்றி, கர்நாடகா சலனசித்ரா அகாடமி, கர்நாடகா நாடக அகாடமி, கர்நாடகா சங்கீத ருத்ய அகாடமி, கர்நாடகா ஞானபடா அகாடமி, கர்நாடகா லலித்கலா அகாடமி, கர்நாடகா யக்‌ஷகானா அகாடமி, கர்நாடகா பயலதா அகாடமி ஆகியவற்றுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவில் செஸ் வரியை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இது டிக்கெட் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த செஸ் வரியானது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. புதிய மசோதாவில் ஓடிடி எனப்படும் ஆன்லைன் பிளாட்பார்ம்களின் சந்தா கட்டணம் மீதான செஸ் வரியும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் கலாச்சார செயல்பாட்டாளர்கள் ஆகியோருக்கு நல வாரியம் அமைக்கவும் மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில் மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்களுக்கு 3 ஆண்டுகள் பதவிக் காலம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர திரைப்பட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதிலும் செஸ் முக்கிய பங்காற்றும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கர்நாடகா மாநிலத்திற்குள் நடைபெறும் மேடை நாடகங்களுக்கும் செஸ் வரியை அமல்படுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை செயலாளர் முகமது மொஹ்சின் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like