1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! இன்று காலை 6:00 மணி முதல் லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்..!

1

“ஹிட் அண்ட் ரன்” சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கடுமையாக்கியது. அதன்படி வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டால், ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து காவல் துறையிடமோ அல்லது மாஜிஸ்திரேட்டிடமோ தெரிவிக்காமல் தப்பிச் சென்றால், அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தனர்.

இதன்படி, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி செல்லும் டிரைவர்களுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை அல்லது, 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை கண்டித்தும், கையெழுத்து இல்லாத இணையதள வழக்கை எதிர்த்தும் கடந்த சில நாட்களாக, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை லாரி ஓட்டுனர்கள் சங்கத்தினர் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், இன்று  காலை, 6:00 மணி முதல்  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.

லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நட்ராஜ் கூறியதாவது:விபத்து ஏற்படுத்தி தப்பி செல்லும் டிரைவர்களுக்கு பத்தாண்டு சிறை தண்டனை என்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே,  இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி லாரி டிரைவர்கள் சங்கத்தினர் போராட்டம் தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக லாரி உரிமையாளர்கள் சங்கம், கேரட் கழுவுபவர்கள் சங்கம், இங்கிலீஷ் காய்கறிகள் வியாபாரிகள் சங்கம் உட்பட பல்வேறு சங்கத்தினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதன்படி நீலகிரி மாவட்டத்தில், 350 லாரிகள் ஓடாது.  ஆயிரம் டன் காய்கறிகள் தேக்கமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like