மக்கள் அதிர்ச்சி..! வரும் 9ம் தேதி தமிழகத்தில் பஸ் ஸ்ட்ரைக் அறிவிப்பு..!
பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் ஜனவரி 4ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை கைவிடக் கோரி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததுதான் என்ற அவர், அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியுள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை இந்த அரசு நிறைவேற்றி தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று சென்னையில் தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கையை அரசு எந்த வித உறுதியும் அளிக்கவில்லை,இதை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை இரு பிரிவுகளாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்டம் அறிவிப்பு.CITU , AITUC, HMS ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு