1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! கோவிஷீல்டு ஊசி போட்டவங்களா நீங்கள் ? அப்போ உஷாரா இருங்க..!

1

2019 டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனமும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கியது. அதனை சீரம் இஸ்ட்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரித்தது.  இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்கும் வகையில் ஏராளமான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கோவிஷீல்டு, கோவாக்சின், நோவாவேக்ஸ், பிஃபைசர் என பல தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன.

கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டன. ஆரம்பக்காலத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலர் அடுத்த சில தினங்களிலேயே உயிரிழந்தனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இது இது ஒருபுறம் இருக்க, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் பல பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மாரடைப்பில்  மரணம், கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன.

இந்த சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தான் இதுபோன்ற மாரடைப்புகள் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் பதில் அறிக்கை ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தான் நம்மை திடுக்கிட வைத்திருக்கின்றன.

ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஓர் ஆவணத்தில் மட்டும் கோவிஷீல்டு அரிதாக ரத்த உறைதல், ரத்த தட்டுக்கள் குறைதலை ( TTS - Thrombosis with Thrombocytopenia Syndrome) பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் இது ஏன் ஏற்படுகிறது என்பது தெரியவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீராத தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், சிந்திக்கும் திறனில் மாற்றம் போன்றவை இதன் அறிகுறிகள் எனக் கூறப்படுகிறது. இதயத்தில் ரத்தம் உறைந்தால் இதயத்திற்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதுதான் மாரடைப்புக்கு காரணமாகிறது. மூளையில் ரத்தம் உறைந்தால் மூளை பக்கவாதம், மூளை செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போடுங்கள் போடுங்கள் எனக் கூறிவிட்டு, இப்போது அதனால் இத்தனை பாதிப்புகள் வருகிறது என தடுப்பூசி நிறுவனமே கூறியிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்ட்ராஜெனக்காவின் இந்த ஒப்புதலால் கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிக்கப்பட்டதாகக் கூறும் பலர் மற்றும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பெரிய அளவில் இழப்பீடு வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like