மக்கள் ஷாக்..! தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்வு..! சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்தது..!
கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 470-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதே வேகத்தில் தங்கம் விலை உயரும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் ஒரு சவரன் ரூ. 76 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலையில் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,535-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.76,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
.png)