1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை... மூன்று வாரங்களில் ரூ.3,300 அதிகரிப்பு..!

1

கடந்த வாரம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்பின் இறங்கு முகமாகவும், ஏறுமுகமாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை கிராம் ஒன்றிற்கு 45 ரூபாய் அதிகரித்து பவனுக்கு 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் தங்கம், கடந்த 18-ந்தேதி ஒரு கிராம் 5,565 ரூபாய்க்கும், 19-ந்தேதி 5,585 ரூபாய்க்கும், 20-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 21-ந்தேதி 5,670-க்கும், 22-ந்தேதி 5,670-க்கும் விற்பனை ஆனது. 23-ந்தேதி 5,660 ரூபாய்க்கும், 24-ந்தேதி 5675 ரூபாய்க்கும், நேற்று முன்தினம் 5,655 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் நேற்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700ஆகவும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,600 ஆகவும் விற்பனையானது. 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,669 ஆகவும், சவரனுக்கு ரூ 296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,352 ஆகவும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000 ஆகவும் விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லதரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.3,300 அதிகரித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like