மக்கள் ஷாக் ..! கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1800 உயர்வு..!

தினந்தோறும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், நேற்றும் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு பவுன் தங்கம் விலை நேற்று சென்னையில் ரூ.63 ஆயிரத்தை தாண்டியது. இன்று விலை கூடுமா அல்லது குறையுமா என்று நகைப்பிரியர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் ரூ.7,930-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,440-க்கும் விற்பனையாகிறது.
இந்த வார தொடக்கத்தில் இருந்து இன்று வரை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
04-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,480
03-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 61,640
02-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320
01-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 62,320