மக்கள் ஷாக்..! தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது..!
தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9-ம், கிலோவுக்கு ரூ.9 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.192-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
29.11.2025 ஒரு சவரன் ரூ.95,840 (இன்று)
28.11.2025 ஒரு சவரன் ரூ.94,720 (நேற்று)
27.11.2025 ஒரு சவரன் ரூ.94,160
26.11.2025 ஒரு சவரன் ரூ.94,400
25.11.2025 ஒரு சவரன் ரூ.93,760
24.11.2025 ஒரு சவரன் ரூ.92,160