மக்கள் ஷாக்..! ஒரு கிராம் தங்கம் ரூ.8000 தாண்டியது..!

கடந்த 3 நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தங்க விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு கிராம் 8000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது என்பதும் அதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 64 ஆயிரத்தை தாண்டி விட்டது .
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.64,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,035-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.