மக்கள் அதிர்ச்சி..! ஈபிள் டவரில் பயங்கர தீவிபத்து!
முக்கிய டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து பார்த்து செல்கின்றனா்.
நேற்று காலை வழக்கம்போல் ஈபிள் கோபுரத்தை காண பலரும் வருகை தந்தனா். சுமார் 1,200க்கும் மேற்பட்டோர் ஈபிள் கோபுர பகுதியில் இருந்தனா். இந்த நிலையில் ஈபிள் கோபுரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேற தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அந்த தகவலின்போில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனா். அவர்கள் ஈபிள் கோபுரத்திற்கு வந்து அங்கு பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனா். இதற்கிடையே ஈபிள் கோபுர பகுதியில் இருந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனா்.
Video but seems not close
— Uncensored News (@Uncensorednewsw) December 24, 2024
Eiffel Tower Fire Forces Evacuation! 🇫🇷
A fire sparked in a lift shaft, forcing 1,200 visitors to evacuate. Firefighters got it under control, but the tower’s still closed for safety
And just 2 miles away, another fire broke out near St. Lazare station.… pic.twitter.com/EOz9m6WAKJ