1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! செம்மொழி பூங்கா மலர் கண்காட்சிக்கான கட்டணம் திடீர் உயர்வு..!

Q

தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் நடைபெற உள்ளது

இன்று தொடங்கி ஜனவரி 18-ந்தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் இதனை பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ.150 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் சுமார் 800 வகையான விதவிதமான செடிகள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன.2022 முதல் சென்னையில் நடக்கும் மலர் கண்காட்சிக்காக ஊட்டி, ஏற்காடு, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இம்மலர்க் காட்சி ஜனவரி 2-ஆம் தேதியான இன்றையதினம் தொடங்கி 18.1.2025 வரை நடைபெற உள்ளது. செம்மொழி பூங்காவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுசீட்டு வழங்கப்படும்.

மேலும் https://tnhorticulture.in/spetickets/ என்ற இணையதளம் வாயிலாகவும் நுழைவுச்சீட்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மலர்க் கண்காட்சியைக் காண்பதற்கான கட்டணம் இந்தாண்டு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு ரூ. 150-லிருந்து ரூ. 200-ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.75-லிருந்து ரூ.100-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் கேமராவுக்கு ரூ.500, விடியோ கேமராவுக்கு ரூ. 5000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like