1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! கடந்த 5 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் உயர்வு..!

1

பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.45ல் இருந்து  5 காசுகள் உயர்த்தி ரூ. 5.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இந்த விலை இன்று (10-11-2023) காலை முதல் அமலுக்கு வருகிறது. முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் பண்ணையாளர்கள். கடந்த 5 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like