1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அதிர்ச்சி..! சர்ரென உயர்ந்த அமுல் பால் விலை..!

1

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில் அரை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய விலையின் படி அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் 64 ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் பால் விலை தற்போது 64 ஆக உயர்ந்துள்ளது. தயிர் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.

உற்பத்தி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்டும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like