மக்கள் அதிர்ச்சி..! ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் 25-ந் தேதி முதல் நிறுத்தம்..!

ஆவின் நிர்வாகம் வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்ஸி, மோர், சாக்லேட், தயிர் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் உப பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.
ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது..
மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது.4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது.வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.
வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.