1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் அலறி ஓட்டம்..! தீப்பிடித்த கார் சாலையில் வேகமெடுத்து ஓடியதால் பரபரப்பு..!

1

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜிதேந்திர ஜாங்கிட் என்பவர் காரை ஒட்டி சென்றுள்ளார். அவர் சாலையில் செல்லும் போது திடீரெனகுளிரூட்டியிலிருந்து புகை கிளம்பியதை அவர் கண்டார்.உடனே காரிலிருந்து இறங்கிய அவர், அதன் முன்பக்கத்தைத் திறந்து சோதித்தபோது, காரின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததைக் கண்டார்.

சில நொடிகளில் காரின் உட்புறத்திற்கும் தீ பரவி, ‘ஹேண்ட்பிரேக்’சேதப்படுத்தியது. மேலும், உயர்த்தப்பட்ட சாலையின் இறங்குவழியில் இருந்ததால் கார் தானாகவே ஓடத் தொடங்கியது.சாலையில் நிறுத்தப்பட்ட மோட்டார்சைக்கிளில் மோதிய அக்கார், பின்னர் சாலைப்பிரிப்பானில் மோதி நின்றது.

இதை அறிந்த தீயணைப்புத்துறையினர் காரைப் பற்றியிருந்த தீயை அணைத்தனர். கார் முற்றிலும் தீயில் கருகிப்போனதாக அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், பற்றியெரிந்தபடி கார் வந்ததைக் கண்ட இருசக்கர வாகனவோட்டிகள் சிலர், தங்கள் வாகனத்தைச் சாலையிலேயே போட்டுவிட்டு ஓடியதைக் காண முடிந்தது.


 

Trending News

Latest News

You May Like