1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! 'கீலன்பா சிண்ட்ரோம்' பாதிப்புக்கு மூவர் பலி..!

W

மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி வழக்கத்தைவிட மிகத் தீவிரமாக செயல்படும் போது, ஜி.பி.எஸ்., எனப்படும் கீலன்பா சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுகிறது.
பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையும்போதும் இந்த குறைபாடு ஏற்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதிப்பு ஏற்படும் போது உடல் பாகங்களில் உணர்ச்சியற்ற தன்மை உருவாகும், தசைகள் பலவீனம் அடையும், செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. உயிரிழப்புகளும் நேர்கின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் புனேவில், 127 பேருக்கு ஜி.பி.எஸ்., பாதிப்பு கண்டறியப்பட்டது. புனேவில் பாதிக்கப்பட்ட நபர், சொந்த ஊரான சோலாபூரில் உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து புனேவை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, மஹாராஷ்டிராவில் ஜி.பி.எஸ்., மரணம் இரண்டாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த தேவ்குமார் சாஹு, 10, அரித்ரா மனால், 17 மற்றும் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் ஜி.பி.எஸ்., பாதிப்புக்கு உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like