1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! தனுஷ்கோடியில் திடீர் கடல் சீற்றம்

1

இயற்கையாகவே தனுஷ்கோடி பகுதி கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் உள்ள பகுதியாகும். வழக்கத்திற்கு மாறாக நேற்று பகலில் இருந்து கடல் சீற்றமாகவே இருந்தது.

இந்நிலையில், கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கியும், சாலை வரையிலும் வந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.

கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனை இடையேயான தென்கடல் பகுதியிலும் கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் தடுப்புச் சுவரில் மோதி சாலை வரை வந்தது. இதனை அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தார்கள். கடலில் அலைகள் சக்திவாய்ந்த அலைகள் அதிகமாக எழுவதால் சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்ல இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் தனுஷ்கோடி பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் கடல் சீற்றத்தால் சாலை முழுவதும் தடுப்புச் சுவரின் கற்கள் பெயர்ந்தும் கடலில் உள்ள பாசி மற்றும் தாழை செடிகளும் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

Trending News

Latest News

You May Like