1. Home
  2. தமிழ்நாடு

பீதியில் மக்கள்..! இந்தோனேஷியா சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Q

காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவநிலை மாற்றங்களும், அடிக்கடி இயற்கை பேரிடர்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளை மையம் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று கூட பாகிஸ்தானில் 4.0 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதேபோல ஆப்கானிஸ்தானிலும் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவில் சற்று முன்பு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 6.2 என்ற அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சுமத்ராவின் தீவில் உள்ள பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ மேற்கே 89 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

 

நிலநடுக்கத்தின் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like