மக்கள் பீதி..! சென்னையிலும் நுழைந்தது புதிய ஹம்பவ் வைரஸ்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/6f3f4efe6bf1238d32d379e78950f02a.jpg?width=836&height=470&resizemode=4)
பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குழந்தை காய்ச்சல் காரணமாக பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தப் பரிசோதனையில் அவருக்கு HMPV வைரஸ் இருப்பது தெரியவந்தது. ஆனால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை என, கர்நாடகாவின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஹர்ஷா குப்தா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி தமிழகத்திலும் நுழைந்தது இந்த வைரஸ்.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு புதிய HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் HMPV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கர்நாடகா 2. குஜராத் 1, கொல்கத்தா 1, தமிழ்நாட்டில் 2 என ஒரே நாளில் 6 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும்
.