1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! பூமியை நோக்கி வரும் இரண்டு மிகப்பெரிய எரிகற்கள் - நாசா எச்சரிக்கை..!

1

விண்வெளியில் இரண்டு எரிகர்கள் பூமியை நோக்கி மிக அருகில் வந்து கொண்டிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சமீபத்திய ஆய்வு எச்சரித்து இருக்கிறது.அதன்படி இந்த இரண்டு எரிகற்களும் வெவ்வேறு கூட்டத்திலிருந்து வருவதாகவும் வெவ்வேறு வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த எரிகர்கள் பூமியை நோக்கி வருவதனால் பூமிக்கும், மனிதர்களுக்கும் ஏதேனும் ஆபத்து இருக்குமா ? என்பதையும் நாசா தெளிவுபடுத்திருக்கிறது.

அப்போலோ எரிகற்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதல் ஏரிகல்லுக்கு எச்கே 1 என நாஸா பெயர் வைத்திருக்கிறது. ஒரு வணிக விமானத்தின் நீளத்தை ஒத்த இந்த முதல் எரிக்கல்லின் நீளம் இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.என்னதான் இந்த எச்கே 1 எரிகல் மிகவும் பெரியதாக இருந்தாலும், இந்த எரிகல்லினால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாது என நாசா தெரிவித்திருக்கிறது.இந்த எரிகல் பயணிக்கும் பாதைக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 6,88,896 கிலோமீட்டர் இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் இதனால் பூமிக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என நாசா விளக்கி இருக்கிறது.

மற்றொரு எரிகல்லுக்கு 2024 ஜேஇ என பெயர் வைத்திருக்கிறது நாசா. இந்த எரிகல் அமோர் எரிகல் கூட்டத்தை சேர்ந்தது. இந்த ஜேஇ எரிகல் பூமியின் வட்டப்பாதையில் இருந்து வெளியே நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் நாசா கண்டுபிடித்து இருக்கிறது. மேலும் இதனளவு 165 அடி அதாவது 50 மீட்டர் எனவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

எச்கே 1 எரிகல்லைவிட 2024 ஜேஇ அளவில் மிகப்பெரியதாக இருக்கிறது. ஆனால் பூமியை விட அதிக தொலைவில் கடந்து செல்கிறது. இதனால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என நாசா கண்டுபிடித்திருக்கிறது.

வழக்கமாக 140 மீட்டரைவிட பெரிய ஏரிகற்களால்தான் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். மேலும் பூமியின் வட்டப்பாதைக்குள் வந்தால் தான் பூமி பாதிப்பு என்பது ஏற்படுமாம். அந்த வகையில் தற்போது பூமியை கடக்கவிருக்கும் எச்கே 1 மற்றும் 2024 ஜேஇ ஆகிய இரண்டு எரிகற்களும் பூமிக்கு வெளிப்பகுதியில் செல்வதால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது என நாசா தெரிவித்து இருக்கிறது.

Trending News

Latest News

You May Like