1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! இந்த பாக்டீரியா உடலுக்குள் நுழைந்தால் சதையை தின்று 2 நாட்களில் மரணம் நிச்சயம்..!

1

கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்து இப்போதுதான் உலகம் மீண்டும் பெருமூச்சு விடும் நிலையில், ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் பெரும் பீதியை கிளப்பி இருக்கின்றன. ஜப்பானில் STSS அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்றழைக்கப்படும் கொடூரமான சதை உண்ணும் பாக்டீரியா மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் 2-ம் தேதி வரை 977 பேருக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த STSS பாக்டீரியா ஒருவரை தாக்கினால், அவர்களின் சதையை உண்ண ஆரம்பித்துவிடும். உடனடியாக இந்த பாக்டீரியா தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், 48 மணிநேரத்தில் ( 2 நாட்கள்) உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என்பதுதான் இதில் பயமுறுத்தும் விஷயம்.

இந்த பாக்டீரியா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பாக்டீரியா தாக்கினால் ஆரம்பத்தில் காய்ச்சல், தசை வலி, குமட்டல் போன்றவை ஏற்படும். இது ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தான். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டு, உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்கும். அதன் பிறகு இதயத்துடிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு 48 மணிநேரத்திற்குள் உயிர் பிரிந்துவிடும்.

உடலில் காயங்கள் இருப்பவர்கள், அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர், பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள் ஆகியோரை இந்த பாக்டீரியா தாக்கும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த பாக்டீரியா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு குறைவு என்பதுதான்.

Trending News

Latest News

You May Like