1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! சேலத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...!

Q

சேலம் மாவட்டம், தாதகாபட்டியில் 4 பேருக்கும், இதேபோல மற்ற பகுதிகளில் 5 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல, மேலும், 20 பேருக்கு ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்களுக்க பாதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பது தெரியவரும்

கொரோனா பாதித்த 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமை படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது, ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவில் இந்த தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை. தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்படவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like