1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! இந்தியாவிற்குள் நுழைந்தது சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ்: 8மாத குழந்தை பாதிப்பு..!

Q

சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவத் துவங்கியுள்ளது. சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் பலர் முக கவசம் அணிந்து காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.

இந்த வைரஸ் குறித்து நம் நாட்டின் தேசிய சுகாதார சேவைகள் இயக்குனர் அதுல் கோயல் கூறுகையில், ''சளி போன்ற அறிகுறிகளே இதனால் இருக்கும். வயதானவர்கள், குழந்தைகளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் கவலையடையும் அளவுக்கு இது தீவிரமான விஷயமில்லை,'' என்றார்.

இந்நிலையில், இன்று (ஜன.,06) இந்தியாவில் முதல் சீனாவின் எச்.எம்.பி.வி வைரஸ் தொற்று பெங்களூருவில் பதிவாகியுள்ளது. 8 மாத குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like