மக்கள் பீதி..! ஒரே நாளில் 511 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

சீனாவில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் பரவ தொடங்கியது.இந்த பரவல் மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கொரோனா தொற்றால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல் திணறினர். இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கொத்து கொத்தாக உயிரிழந்தனர். இதனால் உலக சுகாதார அமைப்பு (WHO) பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவுறுத்தியது. அதன்படி, உலக நாடுகளில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொர்ந்து கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஆராய்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து தடுப்பூசியை கண்டுப்பிடித்தனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதனால் கொரோனா பரவல் தாக்கம் சற்று குறைந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூர் , தாய்லாந்த் , ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதம் தொடக்கத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தது. இதுவரை சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் தாய்லாந்த் , ஹாங்காங்கில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, மும்பை, கொல்கத்தா, கேரளா, மகாராஷ்ரா உள்ளி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 27 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இதுவரை தமிழ்நாட்டில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக உயர்ந்து உள்ளது.
அதே போல் கேரளாவில் 100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 227 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.மேலும் கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,147ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710ஆக உயர்வு உள்ளது. ஒரே நாளில் மேலும் 511 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர்