1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! பரவும் டெங்கு காய்ச்சல் - மருத்துவமனையில் 45 பேருக்கு சிகிச்சை..!

1

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வடமதுரை, பழனி, கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்டவர்களுக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் பிரிவில் இயங்கி வரும் டெங்கு வார்டில் ஒரு குழந்தை 4 பெண்கள் என மொத்தமாக 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது வரை காய்ச்சல் காரணமாக 12 குழந்தைகள் உட்பட 45 நபர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் என மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like