1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் பீதி..! கேரளாவில் காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு சிகிச்சை!

1

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக டெங்கு, பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான காய்ச்சல் பாதிப்புகள் பொதுமக்களிடையே வேகமாக பரவி வருகிறது.

Fever

இதனால் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 11 ஆயிரத்து 813 பேர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதில் 150 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 6 பேர் காய்ச்சல் பாதிப்பால் நேற்று உயிரிழந்துள்ளனர். அத்துடன் சின்னம்மை பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. சிக்கன் பாக்ஸ் தொற்றால் 71 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏலிக்காய்ச்சலால் 7 பேர், எச்1என்1 தொற்றால் 8 பேரும் மருத்துவமவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

Kerala

இதனிடையே பொதுமக்கள் அடுத்த சில தினங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த அடுத்த மூன்று நாட்களை உலர் நாட்களாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like