1. Home
  2. தமிழ்நாடு

கெட் அவுட் ஸ்டாலின் சொல்ல மக்கள் தயாராக தான் உள்ளார்கள் ஆனால்... திமுகவை சீண்டிய கஸ்தூரி!

1

கடந்த சில தினங்களாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திமுகவினர் #GetOutModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்தனர்.

இதனால் கடுப்பான தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சியை அகற்ற வேண்டும் என குற்றச்சாட்டுக்களை அடுக்கி #GetOutStalin என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டார். இதையடுத்து பாஜகவினர் #GetOutStalin என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக்தான் காலை முதல் ட்ரெண்டிங்கில் டாப்பில் உள்ளது. இந்நிலையில் சமூக ஆர்வலரும் பிரபல நடிகையுமான கஸ்தூரி இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் #GetOutStalin என்று சொல்ல மக்கள் தயாராகதான் உள்ளார்கள் ஆனால் சரியான மாற்று கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகள் ஒரே முகமாக போராடினால் மாற்றம் வரும் என்றும் தெரிவித்துள்ளார் கஸ்தூரி. இதுதொடர்பாக கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது, " #getoutstalin என்று சொல்ல மக்கள் தயார் தான். சரியான மாற்று கிடைத்தால். திமுக கூட்டணி ஒற்றுமையாக பணம் பலம் அனைத்துடன் உள்ளது. எதிர்க்கட்சியினரோ சிதறி உள்ளனர் . தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தள்ளி வைத்து மக்களுக்காக ஒரேமுகமாக போராடினால் மாற்றம் வரும்." இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரி தொடர்ந்து திமுகவுக்கு எதிராக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பாஜக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பதிவுகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் மறுபதீவு செய்து வரும் கஸ்தூரி, சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் ஆளும் திமுக அரசை விமர்சித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக கஸ்தூரி மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு திமுவுக்கு எதிரான அரசியலை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளார் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like