1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை: ஜி.கே.வாசன்..!

Q

ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கச்சத்தீவு தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது சட்டமன்ற தேர்தல் நோக்கத்தில் தான். மக்களை ஏமாற்றும், குழப்பும் தி.மு.க அரசை மக்கள் நம்பத் தயாராக இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது மவுனம் காத்தது திமுக தலைமையிலான அரசு. இதுரையில் தி.மு.க கச்சத்தீவுப் பிரச்சனைக்கும், மீனவர்கள் பிரச்சனைக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
தற்போது பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறக்க வரும் நேரத்தில், சட்டமன்ற தேர்தல் வரும் காலத்தை காரணமாகக் கொண்டு கச்சத்தீவு குறித்து தீர்மானம் கொண்டுவந்து மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறது தி.மு.க அரசு. மத்திய அரசு கச்சத்தீவை மீட்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறும் என்ற நம்புகிறோம்.
எனவே தமிழக தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும், குழப்பும் செயல்பாடுகளில் ஈடுபடாமல் மக்கள் பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்தி மக்கள் நலன் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார் . 

Trending News

Latest News

You May Like