1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் செம ஹேப்பி... இன்றும் குறைந்த தங்கம் விலை...

மக்கள் செம ஹேப்பி... இன்றும் குறைந்த தங்கம் விலை...


தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 312 ரூபாய் குறைந்துள்ளது...

கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

நேற்று ரூ.37,672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று ரூ.37,360க்கு விற்பனையாகிறது. அதே போல், நேற்று 4,709 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை 39 ரூபாய் குறைந்து, ரூ.4,670 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 66,700 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 600 குறைந்து 66,100 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது

நடப்பு ஆண்டு தொடக்கம் முதலே ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. எனினும் செப்டம்பர் மாதம் முதல் சரியத் தொடங்கிய தங்கத்தின் விலை, தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like