மக்களே உஷார்..!! நாளை காலை வரை... மிக கனமழை கொட்டப் போகுது!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சென்னை மண்டலம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகத்தில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும். குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், நெல்லை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும் நவம்பர் 3ஆம் தேதி காலை வரை மிக கனமழையை எதிர்பார்க்கலாம். எனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடப்படுகிறது. பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.