அனுமதியின்றி மின்சார ரயில்களில் பயணம் செய்தால் அபராதம் !!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக ரயில்சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்காக மட்டும் அக்டோபர் 5 முதல் புறநகர் மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறிப்பு ரயிலில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்க முடியும் .
ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என பலரும் அரசின் அனுமதியின்றி இந்த ரயில்களில் பயணம் செய்வதால் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆங்காங்கே புறநகர் மின்சார ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் பயனாளிகளின் அடையாள அட்டையை சோதனை செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இருப்பினும் பொதுமக்கள் பயணம் செய்வதை முழுவதுமாக தடுக்க முடியவில்லை.
தற்போது இதை முற்றிலும் தடுப்பதற்காக சிறப்பு ரயில்களில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்கள் அபராதத் தொகையாக ரூ. 200 முதல் ரூ. 300 வரை செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மட்டுமே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in