பேடிஎம் நிறுவன தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா..!
பணம் செலுத்துதல் மற்றும் கடன் வழங்கும் வணிகங்களை மேற்பார்வையிட்ட பேடிஎம் நிறுவனத்தின் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான பவேஷ் குப்தா, தனிப்பட்ட காரணங்களுக்காக இ்ந்த முடிவை எடுத்துள்ளார். அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதி வரை பேடிஎம் நிறுவனத்தின் வளர்ச்சி முயற்சிகளுக்கு வழிகாட்டும் ஆலோசகராக அவர் செயல்படுவார் என்று பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் தனது ஒழுங்குமுறை தாக்கலில், அவரது ராஜினாமாவை நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், வரும் 31-ம் தேதி அன்று வணிக நேரம் முடிவடையும் நேரம் முதல் அவர் நிறுவனத்தின் சேவைகளில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.
பின்டெக் நிறுவனத்தின் முன்னாள் சி.ஓ.ஓ. என்று மாறியிருக்கும் அவர், தனது ராஜினாமாவில், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை விட்டு வெளியேறுவதாகவும், அவரது கடைசி வேலை நாள் மே 31 ஆக இருக்கும் என்றும் தன்னுடைய ராஜினாமா குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் ஆலோசகராக தொடர்ந்து செயல்படுவேன் என்றும் அவர் தன்னுடைய ராஜினாமா குறிப்பில் மேலும் கூறியுள்ளார்.
பேடிஎம் நிறுவனர் விஜய் ஷர்மாவின் ராஜினாமா கடிதத்தில், எங்கள் தற்போதைய தனிப்பட்ட உரையாடல்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட காரணங்களால், பேடிஎம்மின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ. பதவியில் தொடர முடியாது, மேலும் 2024 மே 31-ம் தேதி வணிக நேரத்துடன் ராஜினாமா செய்கிறேன், அதற்கேற்ப விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.